Monday, November 10, 2014

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று முதல் மாதிரி வினாப் புத்தகங்கள்

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2
மாணவர்களுக்கான மாதிரி வினாப்
புத்தகங்கள் திங்கள்கிழமை (நவ.10) முதல் அந்தந்த மாவட்டங்களில் விநியோகிக்கப்பட உள்ளன.

இதற்காக மொத்தம் 7 லட்சத்துக்கும்
அதிகமான மாதிரி வினாப் புத்தகங்கள்
அச்சிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம்
சார்பில், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2
பொதுத்தேர்வு எழுதும் மாணவ,
மாணவிகள் பயன்பெறும் வகையில்,
வினா வங்கி, மாதிரி வினா ஏடுகள், தீர்வுப்
புத்தகங்கள் குறைவான விலையில்
விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
நிகழாண்டும் பிளஸ் 2
மாணவர்களுக்கு வினா வங்கி, மாதிரி வினாப்
புத்தகங்கள், தீர்வுப் புத்தகங்கள் தமிழ் வழி,
ஆங்கில வழியில் ஒவ்வொரு பாட
வரிசைக்கும் ரூ.25 முதல் ரூ.95 வரையில்
விற்பனை செய்யப்படும்.
10-ஆம் வகுப்புக்கு 3 புத்தகங்களைக்
கொண்ட ஒரு தொகுதியின்
விலை ஆங்கில வழிப் புத்தகங்கள் ரூ.200-க்கும், தமிழ்
வழி புத்தகங்கள் ரூ.205-க்கும்
விற்பனை செய்யப்பட உள்ளன.

No comments:

Post a Comment