ஆறு ஆண்டுகளாக
பணி வரன்முறை செய்யாததால் பதவிஉயர்வு, ஊக்க ஊதியமின்றி 1,200 கம்ப்யூட்டர் ஆசிரியர் பயிற்றுனர்கள்
தவித்து வருகின்றனர்.
அரசு மேல்நிலைபணி வரன்முறை செய்யாததால் பதவிஉயர்வு, ஊக்க ஊதியமின்றி 1,200 கம்ப்யூட்டர் ஆசிரியர் பயிற்றுனர்கள்
தவித்து வருகின்றனர்.
பள்ளிகளில் 1996ல் தொகுப்பூதியத்தில் 1880
கம்ப்யூட்டர் ஆசிரிய பயிற்றுனர்கள்
நியமிக்கப்பட்டனர். ஆசிரியர் தேர்வு வாரியம்
மூலம் 2008ல் தேர்வு நடத்தப்பட்டு 1,060 பேர்
பணிநிரந்தரம் செய்யப்பட்டனர்.
சுப்ரீம் கோர்ட்
உத்தரவுப்படி தேர்ச்சி பெறாதவர்களுக்கு
மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 140 பேர்
மட்டும் தேர்ச்சி பெற்று பணிநிரந்தரம்
செய்யப்பட்டனர். தேர்ச்சி பெறாத 656 பேர்
பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
பணிநிரந்தரம் செய்யப்பட்டவர்கள்
ஆறு ஆண்டுகளாகியும்
இதுவரை பணி வரன்முறை
செய்யப்படவில்லை. இதனால்
அவர்களுக்கு பதவி உயர்வு, ஊக்க ஊதியம்
போன்ற பணப்பலன் கிடைக்கவில்லை. மற்ற
ஆசிரியர்களை போல் இடமாறுதலும்
வழங்கப்படவில்லை. இதனால் 1,200 பேரும்
தவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு மேல்நிலை முதுகலை கம்ப்யூட்டர்
ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர்
அருள்ஜோதி கூறியதாவது: ஆதிதிராவிடர்
பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 50 கம்ப்யூட்டர்
ஆசிரிய பயிற்றுனர்களுக்கு ஆக.,27 ல்
கவுன்சிலிங் மூலம் இடமாறுதல்
வழங்கப்பட்டது. முதுகலை பட்டம் முடித்தும்
பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
தற்போது காலியாக உள்ள 656 பணியிடங்கள்
வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்பட
உள்ளன. அதற்குள் எங்களுக்கு இடமாறுதல்
கவுன்சிலிங் நடத்த வேண்டும்.
பணி வரன்முறைப்படுத்த வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment