Monday, November 17, 2014

தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீடு: 1.39 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு: பள்ளி கல்வித் துறைச் செயலர் சபிதா

நலிவுற்ற, வாய்ப்பு மறுக்கப்பட்ட
குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25
சதவீத ஒதுக்கீட்டின் கீழ் கடந்த இரண்டு
ஆண்டுகளில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 805
பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்
என மாநில
பள்ளி கல்வித் துறைச் செயலர் சபிதா
கூறினார். பள்ளி கல்வித் துறை சார்பில்
குழந்தைகள் தின விழா, டாக்டர் எஸ்.ஆர்.
அரங்கநாதன் விருது வழங்கும்
விழா வெள்ளிக்கிழமை (நவ.14)
கொண்டாடப்பட்டது.
இதில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே
.சி. வீரமணி பங்கேற்று கட்டுரை, பேச்சுப்
போட்டி, பல்வேறு விளையாட்டுப்
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,
மாணவிகளுக்கு பரிசுகளையும்
சான்றிதழ்களையும் வழங்கியதோடு, சிறந்த
30 நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர்.
அரங்கநாதன் விருதுகளையும் வழங்கி
கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித் துறைச்
செயலர் சபிதா பேசியது:
வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத
அளவுக்கு பள்ளி கல்வித் துறை
மேம்பாட்டுக்காக தமிழக அரசு ரூ. 64
ஆயிரத்து 485 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
இதில் மாணவ, மாணவிகளுக்கு
வழங்கப்படும் 14 வகை நலத்
திட்டங்களுக்காக மட்டும் ரூ. 10 ஆயிரம்
கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தரமான
கல்வி கிடைக்க வழி செய்யும் வகையில்
காலியாக இருந்த 76,338 ஆசிரியர்
பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு
உத்தரவிட்டு, இதுவரை 72,557 ஆசிரியர்
பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, ஆசிரியர் அல்லாத 15,820
பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு
பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில்,
இதுவரை 8,881 பணியிடங்கள்
நிரப்பப்பட்டுள்ளன.
கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில்
நலிவுற்ற, வாய்ப்பு மறுக்கப்பட்ட
குழந்தைகளுக்கு தனியார் கல்லூரிகளில்
25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட
வேண்டும் என்ற நிபந்தனையை
முழுமையாக அமல்படுத்துவதில் தமிழக
அரசு தீவிர முனைப்பு காட்டியது.
அதன் காரணமாக, வேறு எந்த
மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு 2013-14
கல்வியாண்டில் 49,864 மாணவ, மாணவிகள்,
2014-15 கல்வியாண்டில் 89,941 மாணவ,
மாணவிகள் என மொத்தம் 1 லட்சத்து 39
ஆயிரத்து 805 நலிவுற்ற மாணவர்கள் இந்த
சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில்
சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதற்காக மத்திய அரசின் சார்பில்
தமிழகத்துக்கு பாராட்டும்
தெரிவிக்கப்பட்டது என்றார் அவர்.
விழாவில் முன்னதாக, பள்ளி மாணவ,
மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள்
நடத்தப்பட்டன.

No comments:

Post a Comment