Tuesday, November 18, 2014

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வேளாண்மை பட்டதாரி ஆசிரியர் 25 பேர் விரைவில் நியமனம்

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ-
மாணவிகளுக்கு வேளாண்மை கல்வி
கற்பிப்பதற்காக 25 ஆசிரியர்கள்
தேவைப்படுகிறார்கள்.

அரசு உத்தரவுப்படி பள்ளிக்கல்வித்துறை
முதன்மை செயலாளர் த.சபீதா 25
பேர்களை தேர்வு செய்யும்
பணியை ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர்
விபுநய்யரிடம் ஒப்படைத்துள்ளார்.
ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட
உள்ளவர்கள் பி.எஸ்சி. வேளாண்மையுடன்
பி.எட். படித்திருக்க வேண்டும்
அல்லது பி.எஸ்சி.தோட்டக்கலையுடன் பி.எட்.
படித்திருக்க வேண்டும்.
எழுத்து தேர்வு எழுதவேண்டும். அதில் அதிக
மதிப்பெண் பெறுபவர்களுக்கு ஆசிரியர்
பணி கிடைக்கும். இதற்கான
அறிவிப்பு விரைவில் வெளி வர உள்ளது.

No comments:

Post a Comment