அரசு உத்தரவின் படி, கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள,
மாணவர்களின் சேர்க்கைக்கான கட்டணம்
எப்போது வழங்கப்படும்
என்று பள்ளி நிர்வாகிகள் காத்திருக்கும் சூழலில், கட்டண விபரம்மாணவர்களின் சேர்க்கைக்கான கட்டணம்
எப்போது வழங்கப்படும்
குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
ஆறு முதல் 14 வயதுக்குட்பட்ட
அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி அளிக்கும் வகையில்,
மத்திய அரசு கடந்த 2009-ம் ஆண்டு ஆகஸ்ட்
மாதம் இலவச - கட்டாய
கல்வி சட்டத்தை கொண்டுவந்தது. இந்தச்
சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை, ஆசிரியர்
நியமனம், பள்ளிகளுக்கு அங்கீகாரம்,
ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரம்,
பள்ளி வளர்ச்சி, கல்வி மேம்பாடு உள்பட
பல்வேறு இனங்களில் புதிய விதிமுறைகள்
வகுக்கப்பட்டன.அதன்படி, தனியார் பள்ளிகள்
அருகே வசிக்கும் ஏழை மாணவர்கள், சமூகத்தில்
நலிந்த பிரிவினர் ஆகியோருக்கு, 25 சதவீத
இடங்களை ஒதுக்க வேண்டும்.இதன் படி, தனியார்
பள்ளி ஆரம்ப வகுப்பில் சேரும் மொத்த
மாணவர்கள் சேர்க்கையில், 25 சதவீதம் நலிந்த
பிரிவை சேர்ந்த மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில், மெட்ரிக் பள்ளிகள்
ஆய்வாளர் அலுவலரின் கட்டுப்பாட்டில், 263
தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது
. இப்பள்ளிகளில், கடந்த கல்வியாண்டில், 2000
மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். மாநிலம்
முழுவதும் 19 ஆயிரம் மாணவர்கள்
சேர்க்கப்பட்டனர். இம்மாணவர்களுக்கான,
கல்விக்கட்டணத்திற்காக
அரசு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக
அறிவித்தது. தொடர்ந்து,
கோவை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும்
சேர்க்கப்பட்ட மாணவர்களின் முழு விபரம், கட்டண
தொகைக்கான விபரம்
சேகரிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட கல்வித்துறை அலுவலர் ஒருவர்
கூறுகையில்,'கோவை மாவட்டத்தில், உள்ள
பள்ளிகளுக்கான கட்டணம் நான்கு கோடியாக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த
தெளிவான தகவல் விரைவில்
வெளியிடப்படும். கட்டணங்கள் குறித்த
விபரங்கள் கல்வி அதிகாரிகளிடம்
சமர்பிக்கப்பட்டுள்ளது' என்றார்.தனியார்
பள்ளிகள் நலச்சங்க மாநிலத்தலைவர்
மாயாதேவி கூறுகையில்,''கடந்த 20
நாட்களுக்கு முன்பு அரசு அறிவுறுத்தலின் படி புதிய
வங்கிக்கணக்கு துவங்கப்பட்டுள்ளது. மேலும்,
மாணவர்களின் பெயர், முகவரி,
தொலைபேசி எண் உள்ளிட்ட
அனைத்து விபரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
விரைவில், கட்டணத்தொகை வழங்கப்படும்
என்று எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.
No comments:
Post a Comment