மதுரை மாவட்டத்தில் கல்வித்துறைக்கு
என் தனி 'வெப்சைட்' விரைவில்
துவங்கப்படவுள்ளது.
இதன் மூலம்என் தனி 'வெப்சைட்' விரைவில்
துவங்கப்படவுள்ளது.
மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் உட்பட
அனைத்து விபரங்களும் ஒருங்கிணைக்க
வாய்ப்பு ஏற்படும்.கல்வி இயக்குனர் அலுவலக
சுற்றறிக்கை, உத்தரவு மற்றும் தேவைப்படும்
விபரங்கள், தகவல்கள் மாவட்ட
கல்வி அலுவலகம் வழியாக பள்ளித்
தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி
வைக்கப்படும். இதற்கான பதில்கள் மற்றும்
பதிவேடு நகல்கள்
சென்னை கல்வி இயக்குனருக்கு வந்த
வழியே அனுப்பப்படும்.
இந்த காகித பரிமாற்றங்களை எளிமையாக்க
புதுக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில்
கல்வித்துறைக்கென தனி 'வெப்சைட்'
உருவாக்கப்பட்டுள்ளது. இத்துறையின்
தகவல்கள் அனைத்தும்
ஒருங்கிணைக்கப்பட்டு இயக்குனர்
அலுவலகத்திற்கு உடனுக்குடன்
அனுப்பப்படுகின்றன.
இது வரவேற்பை பெற்றுள்ளதை தொடர்ந்து
மதுரையிலும் செயல்படுத்த
முதன்மை கல்வி அலுவலர்
ஆஞ்சலோ இருதயசாமி ஒப்புதல்
அளித்துள்ளார்.அவரின் நேர்முக
உதவியாளரும் (மேல்நிலைப்பள்ளி), இத்திட்ட
ருங்கிணைப்பாளருமான அனந்தராமன்
கூறியதாவது:
பள்ளி விபரங்கள், அரசு நலத்திட்டம் வழங்கல்,
மாணவ பயனாளி உட்பட பல தகவல்கள் அந்தந்த
பள்ளிகளிலேயே வைக்கப்பட்டுள்ளன. அதன்
விபரங்கள் அவ்வப்போது 'அப்டேட்'
செய்யப்பட்டாலும் அதுகுறித்த விபரம்
முதன்மை கல்வி அலுவலத்திற்கு உடனடியாக
தெரிவிக்கப்படுவதில்லை.இயக்குனர்
அலுவலகம் கேட்கும் போதுதான் பள்ளிகளில்
அதுகுறித்து கேட்கவேண்டியுள்ளது.
இதை எளிமைப்படுத்த தனி 'வெப்சைட்'
உருவாக்கினால் தேவைப்படும்
தகவல்களை முதன்மை கல்வி அலுவலகமே
வேண்டிய நேரத்தில் எடுக்கும்
வாய்ப்பு கிடைக்கும். தகவல்
பரிமாற்றத்திற்கான நேரம் மற்றும் அலைச்சல்
தவிர்க்கப்படும். இதற்காக
ஒவ்வொரு பள்ளிகளுக்கும் 'யூசர் நேம்' மற்றும்
'பாஸ்வேர்டு' வழங்கப்படும். இந்த
'வெப்சைட்'டில் மக்களும் அந்தந்த
கல்வி மாவட்ட விவரங்களை தெரிந்துகொள்ள
முடியும், என்றார்.
No comments:
Post a Comment