Sunday, December 07, 2014

கணினி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு டிச.24ல் தொடக்கம்

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட
ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 6 மையங்களில் நடைபெற உள்ளது.

வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய
மாவட்டங்களுக்கு வரும் 24 முதல் 26ம்
தேதி வரை கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஜெயகோபால்
கரோடியா நேஷனல் மேல்நிலை பள்ளியில் சான்றிதழ்
சரிபார்க்கப்படுகிறது.
ஆசிரியர்களுக்கு தனித்தனியே சான்றிதழ்
சரிபார்ப்பு தொடர்பான அழைப்பு கடிதம்
அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம்
அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment