Sunday, December 14, 2014

மாணவர்கள் நலன் கருதி இந்த கல்வி ஆண்டில் இனிமேல் ஆசிரியர் இடமாற்றம் கிடையாது

பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு அரையாண்டு தேர்வு வந்துவிட்டதால் மாணவர்கள்
நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மாணவர்கள் நலன் கருதி இந்த
கல்வி ஆண்டு வரை இனிமேல் ஆசிரியர்கள்
மாறுதல்
கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
அரசாணை பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கும்,
தொடக்க
கல்வி இயக்குனரகத்திற்கும் பொருந்தும் என்று
குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாணை தமிழ்நாட்டில்
உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள்,
மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட
தொடக்க கல்வி அதிகாரிகள்,
உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு
அனுப்பப்பட உள்ளன.

No comments:

Post a Comment