சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தமிழக அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற தமிழக அரசின் உததரவை எதிர்த்து திருச்சி கமலா நிகேதன் மாண்டிச்சேரி பள்ளி நிர்வாகம் , சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தமிழக அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த உத்தரவால் அனுமதி பெறாத எங்கள் பள்ளிக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தமிழக அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மத்திய, மற்றும் மாநில அரசுக்கு 4 வாரகாலத்திற்குள் பதில் அளிக்கும் படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது
No comments:
Post a Comment