படிக்கும் பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு எழுத வசதி செய் வதற்கு அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனு மீதான விசாரணை தனி நீதிபதிக்கு மாற்றப்பட்டது.
மதிமுக மாநில மாணவரணி செயலர் டி.எம்.ராஜேந்திரன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு விவரம்:
தமிழகத்தில் ஆண்டுதோறும் 15 லட்சம் மாணவ, மாணவிகள் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். ஒரு பள்ளியில் 10, 12-ம் வகுப்புகளில் குறைந்தபட்சம் 100 மாணவர்கள் இருந்தால் மட்டுமே அப்பள்ளியில் பொதுத் தேர்வு மையம் அமைக்க பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கும். மாணவ, மாணவிகள் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போது, அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் அருகில் உள்ள பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுதுகின்றனர்.
பொதுத் தேர்வு எழுதுவதற்காக தேர்வு நாளில் மாணவ-மாணவிகள் பக்கத்து பள்ளிகளுக்கு வாகனங் களில் செல்லும்போது விபத்தில் சிக்குவதும், குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு மையங்களுக்கு செல்வதில் சிரமமும் ஏற்படுகிறது.
பொதுத் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் மனநிலை சீராக இருக்க வேண்டும். அவர் களை மற்றொரு பள்ளிக்கு தேர்வு எழுதுவதற்கு அனுப்பும்போது மனநிலை வேறுபடுகிறது.
இந்த சூழலில் தேர்வு எழுதும்போது மதிப்பெண் குறை வதற்கும் வாய்ப்புகள் உள்ளது. பள்ளியின் தரத்தை உயர்த்திவிட்டு தேர்வு எழுதுவதற்கு மறுப்பது சரியல்ல.
எனவே, மாணவர்களின் எண் ணிக்கையை கருத்தில்கொள்ளா மல், மாணவ, மாணவிகள் படிக்கும் பள்ளிகளிலேயே 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத அனுமதி வழங்க வேண்டும். இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அக்.29-ம் தேதி மனு அனுப்பினேன். அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, என் மனு மீது நடவடிக்கை எடுத்து, 10, 12-வது படிக்கும் மாணவ- மாணவிகள் படிக்கும் பள்ளியி லேயே பொதுத் தேர்வு எழுத வசதி செய்வதற்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சுப்பாராஜ் வாதிட்டார். விசாரணைக்குப் பின், இதை பொதுநலன் மனுவாக விசாரிக்க முடியாது. ரிட் மனுவாகவே தாக்கல் செய்ய முடியும். எனவே, இந்த மனு தனி நீதிபதி விசாரணைக்கு மாற்றப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment