Saturday, January 17, 2015

10ம் வகுப்பு தேர்வு கட்டணம் செலுத்த 19ம்தேதி கடைசிநாள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் வரும் 19ம் தேதிக்குள்
தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
பத்தாம்
வகுப்பு பொது தேர்வு மார்ச் 19ம்
தேதி தொடங்கி ஏப்ரல் 10ம்
தேதி முடிகின்றன.
முன்னதாக, அறிவியல்
பாடப்பிரிவில் படிக்கும்
மாணவர்களுக்கு பிப்ரவரி முதல்
வாரத்தில்
செய்முறை தேர்வுகளை தொடங்க
வேண்டும்
என்று தேர்வுத்துறை முடிவு
செய்துள்ளது. அதன்படி, பத்தாம்
வகுப்புக்கான
செய்முறை தேர்வுகள் மதிய
வேளையில் நடக்கும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த
தேதி மாறுபடும். இந்நிலையில்,
பத்தாம் வகுப்பு பொதுத்
தேர்வு எழுத உள்ள மாணவ,
மாணவியர்
பட்டியல்களை தேர்வுத்துறைக்கு
கடந்த வாரம் வந்து சேர்ந்தது.
அதை அடிப்படையாகக்
கொண்டு மாணவ, மாணவியருக்கான
தேர்வு எண்கள்
ஒதுக்கீடு செய்யும்
பணி நடக்கிறது. இந்த
பணி முடிந்ததும் அந்தந்த
பள்ளிக்கு மாணவர்கள் பட்டியல்
தேர்வு எண்களுடன் வந்து சேரும்.
இதற்கிடையே பள்ளிகள் மூலம்
பத்தாம் வகுப்பு தேர்வு எழுத
உள்ள தமிழ் வழி அல்லாத மாணவ,
மாணவியர், தேர்வுக் கட்டண
சலுகை பெற முடியாதவர்கள் 19ம்
தேதிக்குள்
தேர்வு கட்டணத்தை செலுத்த
வேண்டும் என்று தேர்வுத்
துறை அறிவித்துள்ளது.
தேர்வு கட்டணத்தை நேரடியாக
அந்தந்த
பள்ளி தலைமை ஆசிரியர்களிடம்
மாணவ, மாணவியர் செலுத்தவும்
அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உரிய
நேரத்தில்
கட்டணத்தை வசூலித்து அதை
தேர்வுத்துறைக்கு அனுப்பவும்
தலைமை ஆசிரியர்களுக்கு
தேர்வுத்துறை
அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment