Tuesday, January 06, 2015

2012-13-ல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவிறக்கம் செய்யாதவர்களின் சான்றிதழ்கள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது

ஆசிரியர் தேர்வு வாரியத்தால்
2012-13-ல் நடத்தப்பட்ட ஆசிரியர்
தகுதி தேர்வில்
பங்கு பெற்று தேர்ச்சி
பெற்றவர்களின் சான்றிதழ்
ஆசிரியர் தேர்வு வாரிய
இணையதளத்தில் பதிவேற்றம்
செய்யப்பட்டு, தேர்வர்கள்
பதிவு இறக்கம் செய்ய
அறிவுறுத்தப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக பெரும்பாலான
தேர்வர்கள் தங்கள்
சான்றிதழ்களை பதிவிறக்கம்
செய்து கொண்டனர். சரியான
முறையில் பதிவிறக்கம்
செய்யாதவர்களின் சான்றிதழ்கள்
தற்பொழுது Print out எடுக்கப்பட்டு,
தேர்வர்கள் தேர்வு எழுதிய
மாவட்டத்தின் அடிப்படையில்
தொடர்புடைய
அனைத்து முதன்மைக்
கல்வி அலுவலர்கள் மூலம்
வழங்கப்பட உள்ளது.
தேர்வர்களுக்கு சான்றிதழ்
வழங்கும் பணியானது 19.01.2015 முதல்
14.02.2015 வரை வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment