Tuesday, January 13, 2015

ஜன., 21ல் அடைவுத்தேர்வு - நடப்பாண்டு தேர்வில் எட்டாம் வகுப்பிற்கு அறிவியல் பாடமும் சேர்ப்பு

தமிழகத்தில் உள்ள 3, 4, 5 மற்றும் 8 ம்
வகுப்பு மாணவர்களுக்கு ஜன., 21ல்
அடைவுத்தேர்வு துவங்குகிறது.
தமிழகத்தில் உள்ள
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள்,
நடுநிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும்
பள்ளிகளில் 3, 4, 5 மற்றும் 8 ம் வகுப்பு பயிலும்
மாணவ, மாணவிகளின் கற்கும் திறனை அறிய
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தமிழ்,
ஆங்கிலம், கணிதம்
பாடங்களுக்கு அடைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது.
நடப்பாண்டு தேர்வில் எட்டாம்
வகுப்பிற்கு அறிவியல் பாடமும் சேர்க்கப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு மாநிலம் முழுவதும் உள்ள 32
மாவட்டங்களில்
ஊராட்சி ஒன்றியத்திற்கு தலா 10 பள்ளிகள்
தேர்வு செய்யப்பட்டு, ஜன., 21, 22, 23, 24
தேதிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வில்
மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள்
அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, அதனடிப்படையில்
கற்கும் திறன் குறித்த
ஆய்வறிக்கை தயாரிக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment