கர்நாடகத்தில் ஆசிரியர்
பணிக்கு பொது நுழைவுத்
தேர்வு நடத்தப்படும் என்று, அந்த மாநில
கல்வித் துறை அமைச்சர்
கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார்.
பணிக்கு பொது நுழைவுத்
தேர்வு நடத்தப்படும் என்று, அந்த மாநில
கல்வித் துறை அமைச்சர்
கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூருவில்
வியாழக்கிழமை செய்தியாளர்களிடம்
அவர் கூறியது: கர்நாடகத்தில் உள்ள
பள்ளிகளில் காலியாக இருக்கும் 11,200
ஆசிரியர்
பணியிடங்களை நிரப்புவதற்காக
ஏற்கெனவே ஆசிரியர் தகுதித்
தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தகுதித்
தேர்வில் 23 ஆயிரம் பேர்
தேர்ச்சி பெற்றனர்.
இவர்களில் திறமையானவர்களைக்
கண்டறிந்து பணி நியமனம்
செய்வதற்காக பொது நுழைவுத்
தேர்வு நடத்தப்படும். இதற்காக
அறிவிக்கை இன்னும் 10 நாள்களில்
வெளியாகும். இதன்மூலம், 11,200
பணியிடங்கள் நிரப்பப்படும்.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார்
பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க
இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.
சில நேரங்களில் இணையதளம் சரியாக
செயல்படாததால் மக்களிடையே குழப்பம்
ஏற்பட்டுள்ளது. இதற்கு விரைவில்
தீர்வு காண்போம்.என கல்வித்
துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர்
தெரிவித்தார்.
No comments:
Post a Comment