அரசு கலை-அறிவியல் கல்லூரி களில் 1,095 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில்,உளவியல், சமஸ்கிருதம், சமூகவியல்,
விஷூவல் கம்யூனிகேஷன், இந்திய கலாச்சாரம்,
மனித உரிமைகள் ஆகிய 6 பாடங்களுக்கான
நேர்முகத்தேர்வு பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற
உள்ளது. தகுதியுள்ள
விண்ணப்பதாரர்களுக்கு இதற்கான அழைப்புக்
கடிதம் தபாலில் அனுப்பப்படும். மேலும்,
தேர்வு வாரியத்தின் இணையதளத்தில்
(www.trb.tn.nic.in) இருந்தும் அழைப்புக்
கடிதத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-
செயலர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment