பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்கள்
பொதுத்தேர்வு எழுதும் போது என்னென்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதை தேர்வுத்துறை
தெளிவுபடுத்தியுள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் போது என்னென்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதை தேர்வுத்துறை
தெளிவுபடுத்தியுள்ளது.
செய்யக்கூடியவை என்ன?
* விடைத்தாளின் முகப்பு சீட்டில் உரிய
இடத்தில் மாணவர்கள் கையொப்பமிட
வேண்டும்.
* விடைத்தாளில் ஒரு பக்கத்தில் 20 முதல்
25 வரிகள் வரை எழுத வேண்டும்.
* விடைத்தாளின் இரு புறத்திலும்
எழுத வேண்டும்.
* முறைகள் எல்லாம் விடைத்தாளின்
பகுதியில் இடம்பெற வேண்டும்.
* கேள்வியின் எண் தவறாமல் எழுத
வேண்டும்.
* இரு விடைகளுக்கு இடையே
இடைவெளி விட்டு எழுத வேண்டும்.
* வினாத்தாளின் வரிசை (ஏ அல்லது பி)
மதிப்பெண்களுக்கான பக்கத்தில்
குறிப்பிட வேண்டும்.
* விடைத்தாளில் நீலம்
அல்லது கருப்பு மை பேனாக் களால்
விடைகளை தெளிவாக எழுத
வேண்டும்.
* விடைத்தாளில் எதுவும் எழுதாத
பக்கங்களில் குறுக்கு கோடு இட
வேண்டும்.
செய்யக் கூடாதவை என்னென்ன?
* வினாத்தாளில் எந்தவித குறியீடும்
இடக்கூடாது.
* விடைத்தாளை சேதப்படுத்தக்
கூடாது.
* விடைத்தாளில் எந்த ஒரு பக்கத்திலும்
தேர்வு எண் அல்லது பெயர் எழுதக்
கூடாது.
* கலர் பேனா, பென்சில் எதையும்
பயன்படுத்தக் கூடாது.
* விடைத்தாளில் உள்ள (மார்ஜின்)
கோட்டின் இடது மற்றும் வலது ஓரத்தில்
எழுதக்கூடாது.
* விடைத்தாள் புத்தகத்தின் எந்த
தாளையும்
கிழிக்கவோ அல்லது நீக்கவோ கூடாது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment