Saturday, February 28, 2015

பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு தேர்வுகள்: தடையற்ற மின்சாரம் வழங்க உத்தரவு

பிளஸ் 2, 10-ஆம் வகுப்புத் தேர்வுகள்
தொடங்கவுள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து தேர்வுக் கூடங்களுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கவும், மாணவ,
மாணவிகளுக்கு சீரான போக்குவரத்து வசதியை அளிக்கவும் அரசுத் துறைகளுக்கு தலைமைச்
செயலாளர் ஞானதேசிகன்
உத்தரவிட்டார்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 5-ஆம்
தேதி தொடங்கி மார்ச் 31 வரையிலும்,
10-ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 19-இல்
தொடங்கி ஏப்ரல் 10 வரையும் நடைப
ெறுகின்றன.
பிளஸ் 2 தேர்வை 8.43 லட்சம் பேரும், 10-
ஆம் வகுப்புத் தேர்வை 10.72 லட்சம்
பேரும் எழுதுகின்றனர்.
தேர்வு தொடங்க இன்னும்
ஒரு வாரமே எஞ்சியுள்ள நிலையில்,
தேர்வுக்கான ஏற்பாடுகள்
குறித்து அரசு அவ்வப்போது
ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
தேர்வை சிறப்பாக
நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்
துறை அமைச்சர்
கே.சி.வீரமணி தலைமையில்
அண்மையில் ஆலோசனை நடைபெற்ற
நிலையில், தலைமைச் செயலாளர்
ஞானதேசிகன் தலைமையில் தலைமைச்
செயலகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வுக்
கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், அரசு ஆலோசகர்கள்
ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம்,
பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர்
சபீதா, மின்சார வாரியத் தலைவர்
சாய்குமார், போக்குவரத்துத்
துறை செயலாளர் பிரபாகர ராவ்
உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள்
பங்கேற்றனர்.
மாநிலம் முழுவதும் அமைந்துள்ள
தேர்வுக் கூடங்களுக்குத் தடையற்ற
மின்சாரத்தை அளிக்க வேண்டும்
எனவும், மின்சாரம் அடிக்கடி தடைபடும்
பகுதிகளைக் கண்டறிந்து, அந்தப்
பகுதிகளில் உள்ள தேர்வுக்
கூடங்களுக்கு மின்னாக்கிகளை (
ஜெனரேட்டர்கள்) போதுமான
அளவுக்கு வாங்கி வைத்துக்
கொள்ளவும் அதிகாரிகளை தலைமைச்
செயலாளர் ஞானதேசிகன்
அறிவுறுத்தினார்.
மேலும், கிராமப் பகுதிகளில் வசிக்கும்
மாணவ, மாணவிகள் தேர்வு மையங்கள்
அமைந்துள்ள பகுதிகளுக்கு எளிதில்
சென்று வர வசதியாக கூடுதல்
பேருந்துகளை இயக்கவும் சம்பந்தப்பட்ட
துறையை கேட்டுக் கொண்டார்.
மாணவ, மாணவிகள் எந்தவித
இடையூறும் இல்லாமல்
தேர்வுகளை எழுதுவதை
உறுதிப்படுத்த வேண்டும் என
அறிவுறுத்தினார்.
தேர்வுக்கான வினாத்தாள்கள்,
விடைத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள
அறைகளுக்கு போதிய
பாதுகாப்பை வழங்கவும்
அறிவுறுத்தினார். மேலும்,
விடைத்தாள்களை பாதுகாப்பாக
எடுத்துச் செல்வதற்காக செய்யப்பட்டுள்ள
ஏற்பாடுகள் தொடர்பாகவும் அவர்
கேட்டறிந்ததாக தலைமைச் செயலக
வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment