பிளஸ் 2 செய்முறைத்தேர்வுகளை பிப்.6ல் துவங்கி 24க்குள் முடிக்க அரசு தேர்வுகள்துறை இயக்ககம்
உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2உத்தரவிட்டுள்ளது.
பொதுத்தேர்வு மார்ச் 5ல்
துவங்குகிறது.
அதற்கான பணிகள் தீவிரமாக
நடந்துவருகின்றன. இந்நிலையில்
மாவட்டங்களில் இம்மாணவர்களுக்கான
செய்முறைத்தேர்வை பிப்.,6ல்
துவங்கி 24ம் தேதிக்குள் நடத்தி முடிக்க
வேண்டும் என
அரசு தேர்வுகள்துறை இயக்ககம்
உத்தரவிட்டுள்ளது. மாவட்ட
கல்வித்துறை உயரதிகாரி ஒருவர்
கூறுகையில், "அறிவியல், புவியியல்,
புள்ளியியல்,
தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு
செய்முறைத்தேர்வு நடத்த
முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம்
மாவட்ட வாரியாக
பள்ளிகளை இருபிரிவாக
பிரித்து வெவ்வேறு தேதிகளில் கால
அட்டவணை தயாரித்து பள்ளிகளின்
தலைமையாசிரியர்களுக்கு
அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வக
வசதி இல்லாத பள்ளிகளின் மாணவர்கள்
இத்தேர்வில் பங்கேற்பதற்கான
பள்ளிகளும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகள் அனைத்தையும்
முடித்து மாணவர்களின்
தேர்வு மதிப்பெண்களை பிப்.,28க்குள்
சென்னை இயக்குனரகத்திற்கு அனுப்ப
அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றார்.
No comments:
Post a Comment