Sunday, February 15, 2015

பட்ஜெட் 2015: ரூ.3 லட்சம் வரை வருமான வரி விலக்கு எதிர்பார்க்கலாம்...?

வருகிற பிப்ரவரி 28ஆம் தேதி நரேந்திர
மோடி தலைமையிலான அரசு இரண்டாவது பட்ஜெட் அறிக்கையை நாடாளுமான்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.
இந்த
பட்ஜெட்டை தனிமனிதன் முதல்
கார்பரேட் நிறுவனங்கள், அன்னிய
முதலீட்டு நிறுவனங்கள்
வரை அனைத்து தரப்பினரும் மிகுந்த
ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் மாத சம்பளம்
வாங்குவோருக்கு இந்த பட்ஜெட்டில்
என்ன
கிடைக்கப்போகிறது என்பதை பற்றிய
கணிப்புகளை கே.பி.எம்.ஜி
நிறுவனத்தின் உயர்
அதிகாரி தெரிவித்துள்ளார். வருமான
வரி விலக்கு தற்போது மாத சம்பளம்
பெறுபவர்கள் தங்களது சம்பளம் 2,50,000
ரூபாய்க்குள் இருந்தால் வருமான
வரி செலுத்த தேவையில்லை. இந்த
அளவை மத்திய அரசு 50,000 ரூபாய்
வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக
தெரிவிக்கிறது. இதன் படி 2015ஆம்
ஆண்டில் சம்பளக்காரர்கள் 3,00,000 ரூபாய்
வரை வருமான வரி செலுத்த
தேவையில்லை. 80சி சட்ட
வரி சலுகை மேலும் கடந்த பட்ஜெட்டில்
80சி வரிச்சட்டதத்தின் கீழ்
வரி விலக்கு அளவீடாக 1,00,000
ரூபாயில் இருந்து 1,50,000 ரூபாயாக
உயர்த்தப்பட்டது. இம்முறை இந்த
அளவீட்டை ரூ.1,50,000 இருந்து 2,50,000
ரூபாயாக உயர்த்தப்படலாம் என
நம்பப்படுகிறது. மெடிக்கல்
ரீஇம்பர்ஸ்மென்ட் அளவீடு மேலும்
பணியாளர்கள் மெடிக்கல் ரீஇம்பர்ஸ்மென்ட்
அளவு தற்போது வருடத்திற்கு 15,000
ரூபாயாக உள்ளது, இந்த
அளவீட்டை மத்திய அரசு 2015ஆம்
ஆண்டுக்கான பட்ஜெட்டில் 50,000
வரை உயர்த்தப்படலாம் எனவும்
கணிக்கப்பட்டுள்ளது.
இதை 80டி சட்டத்தின் கீழ்
வரி விலக்கு பெறலாம்.
போக்குவரத்து கொடுப்பனவு
மேலும் போக்குவரத்திற்காக மத்திய
அரசு ஒரு பணியாளர்களுக்கு மாதம்
800 ரூபாய் அளிக்கிறது. இந்த
அளவீடு 1998ஆம் ஆண்டு நிர்ணயம்
செய்யப்பட்டது. இந்த அளவீட்டை மாதம்
4,000 ரூபாய் வரை உயர்த்த மத்திய
அரசு ஆலோசித்து வருகிறது வைப்பு
நிதிகளின் வைப்பு காலம்
தற்போது வங்கிகள் அளிக்கும்
வைப்பு நிதியின் முதிர்வு காலம் 5
ஆண்டுகளாக உள்ளது. இதை 3
வருடமாகவும் குறைக்க
வாய்ப்புள்ளதாவும்
மே.பி.எம்.ஜி நிறுவனத்தின் உயர்
அதிகாரி தெரிவித்துள்ளது.
கல்வித்துறை நாட்டின் வேகமான
வளர்ச்சியில், கல்வித்துறை செலவுகள்
அதிகரித்துள்ளது. குழந்தைகள்
படிப்பிற்கு மாதம் 100 ரூபாயும்,
விடுதி வசதிகளுக்காக 300 ரூபாய்
என்ற அளவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும்
மேலாக மாற்றப்படாமல் மத்திய
அரசு வழங்கி வருகிறது.
இத்தொகையை மாற்றப்படலாம்.
கட்டுமானதுறை கடன் பத்திரங்கள்
நாட்டின் கட்டுமான துறையில்
முதலீட்டை அதிகரிக்க, மத்திய
அரசு நீண்ட கால அடிப்படையில்
முதலீட்டு பத்திரங்களை மீண்டும்
வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த
முதலீட்டில் 50,000 ரூபாய்
வரை வரி விலக்கு அளிக்கவும் மத்திய
அரசு பரிசீலனை செய்து வருகிறது.

No comments:

Post a Comment