பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்
தேர்வில் மாற்றங்களை செய்து தேர்வுத்
துறை உத்தரவிட்டுள்ளது.
தேர்வில் மாற்றங்களை செய்து தேர்வுத்
துறை உத்தரவிட்டுள்ளது.
கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இத்தேர்வில் முதல் பிரிவில் 75
ஒரு மதிப்பெண் கேள்விகள் இடம்
பெறும். கடந்த ஆண்டு வரை இதற்கான
விடையை ஓ.எம்.ஆர்., தாளில், வட்டமிட்ட
பகுதியை பென்சிலால்
கருமைப்படுத்தினர்.
இந்த ஆண்டு முதல் கறுப்பு அல்லது நீல
நிற பால் பாயின்ட் பேனாவால்
கருமைப்படுத்த வேண்டும்.
முன்பு தேர்வுநேரம் முடியும்
வரை ஓ.எம்.ஆர்., தாளை மாணவர்
வைத்திருக்கலாம். இந்த ஆண்டு முதல், 75
நிமிடங்களில் ஒரு மதிப்பெண்
கேள்விக்கு விடை அளித்த உடன்
அறை கண்காணிப்பாளரிடம்
தாளை ஒப்படைக்க வேண்டும். பின்
மீதமுள்ள இரண்டு மற்றும்
ஐந்து மதிப்பெண்
பகுதிக்கு தொடர்ந்து விடை
அளிக்கலாம். 'விடை தெரியாத
ஒரு மதிப்பெண்
கேள்விகளுக்கு கடைசி நேரத்தில்
பதில் எழுதலாம்' என நினைக்கும்
மாணவர்கள் இனி அவ்வாறு செய்ய
முடியாது என்றார்.
No comments:
Post a Comment