Tuesday, February 03, 2015

6 முதல் 10ம் வகுப்பு வரை வீடியோவில் அறிவியல் பாடம்

பள்ளிக் கல்வி இணைய தளத்தில்
இருந்தே பாடங்களை பார்த்தும்,
படித்தும்தெரிந்துகொள்ள வசதியாக
வீடியோ முறைப்பாடங்களை பதிவு
செய்ய பள்ளிக் கல்வித்துறைமுடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக,
6ம் வகுப்பு முதல் 10ம்
வகுப்பு வரை அறிவியல்
பாடங்களை வீடியோவாக தயாரிக்க
பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தொடக்க கல்வித்துறை, பள்ளிக்
கல்வித்துறை ஆகியவற்றின் கீழ்
இயங்கும் தொடக்க மற்றும் உயர்நிலைப்
பள்ளிகளில் 6 முதல் 10ம்
வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள்
எளிதாக
பாடங்களை புரிந்து கொண்டு
படிக்கவும், தேர்வுகளில் அதிக அளவில்
மதிப்பெண் பெறவும் வசதியாக கடந்த
2012-13ம் ஆண்டில் முப்பருவ
கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டது.
தொடக்கத்தில் 1 முதல் 8ம்
வகுப்புவரை முப்பருவ
கல்வி முறை கொண்டு வரப்பட்டு
படிப்படியாக 9 மற்றும் 10ம்
வகுப்புகளுக்கு முப்பருவ
கல்வி முறை கொண்டு வரப்பட்டது.
இருப்பினும், தற்போதையசூழலில் நவீன
தொழில் நுட்பங்களுடன் கூடிய
கல்வியை மாணவர்களுக்கு அறிமுகம்
செய்ய வேண்டி நிலை ஏற்பட்டதால் நவீன
விஷயங்கள் பள்ளிப் பாடங்களில்
சேர்க்கப்பட்டன.ஆனால்,
அவற்றை பள்ளி மாணவர்கள் எளிதில்
புரிந்துகொள்வது கடினமாக
இருக்கிறது. இதனால்
தேர்வு முறையில் சில மாற்றங்கள்
செய்யப்பட்டன. அதன்படி, தொடர்
மதிப்பீட்டு முறை, அடிப்படையில்
செய்முறைகள் கொண்ட அகமதிப்பீடு என
ஒதுக்கி அதற்கு 40 சதவீத மதிப்பெண்கள்
வைக்கப்பட்டது.
பாடங்களை பொறுத்தவரை தேர்வு
எழுதி 60 மதிப்பெண் எடுக்க வேண்டும்.
இருப்பினும் மாணவர்கள்
பாடங்களை புரிந்துகொள்ள
சிரமப்பட்டனர். இதற்காக,
ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள்
அளிக்கப்பட்டன. பயிற்சி பெற்ற
ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தியும்
மாணவர்கள் புரிதலில்
தடை நீடித்து வருகிறது. எனவே,
ஸ்மார்ட் வகுப்புகளை தொடங்க
திட்டமிடப்பட்டது.
அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட்
வகுப்புகள் தொடங்க நிதி ஆதாரம்
போதாத நிலையில் அந்த திட்டம் சில
பள்ளிகளில் மட்டுமே தொடங்கப்பட்டது.
இருப்பினும், மாணவர்கள் கற்றலில்
குறைபாடு நீங்கியதாக
தெரியவில்லை.
இதையடுத்து, காட்சி வாயிலாக
மாணவர்களுக்கு பாடங்களை புரிய
வைக்க
பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது.
பாடங்களின் மையக்
கருத்தை அடிப்படையாக
கொண்டு வீடியோ காட்சிகளாக
அதை மாற்றி பாடம் நடத்த
முடிவு செய்துள்ளனர். இதன்படி, 6ம்
வகுப்பு முதல் 10ம் வகுப்பு அறிவியல்
பாடங்களின் ஒவ்வொரு தலைப்பாக
தேர்வு செய்து அவற்றின் மையக்
கருத்துகளை அடையாளம் கண்டு,
அதை அடிப்படையாக
வீடியோ எடுப்பதற்கான ஸ்கிரிப்ட்
தயாரித்து அதை அப்படியே
வீடியோவாகஎடுக்கவும்
முடிவு செய்துள்ளனர்.
வீடியோவுக்காக ஸ்கிரிப்ட் எழுத
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிறந்த
அறிவியல் ஆசிரியர்களுக்கு ஸ்கிரிப்ட்
தயாரிக்கும் பயிற்சி அளித்து,
மாவட்டத்துக்கு 3 பாட
தலைப்புகளை ஒதுக்கி அந்த தலைப்பில்
ஆசிரியர்கள் ஸ்கிரிப்ட் தயாரிக்கவும்
முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்கிரிப்ட்டில்
உள்ளபடி அப்படியோ வீடியோ
எடுக்கப்படும். இதற்கான
பணிகளை பள்ளிக்
கல்வித்துறை துரிதமாக
செய்து வருகிறது.விரைவில்
மேற்கண்ட வகுப்புகளுக்கான
அறிவியல் பாடங்கள் அனைத்தும்
வீடியோவாக எடுத்து, பள்ளிக்
கல்வித்துறை இணைய தளத்தில்
பதிவு செய்யப்பட உள்ளது.
இதை எப்போது வேண்டுமானாலும்
மாணவர்கள்
பார்த்து பாடங்களை கற்கலாம்.

No comments:

Post a Comment