Friday, March 13, 2015

1,000 அரசு தொடக்க பள்ளிகள்மூடும் அபாயம்!

தொடக்கப் பள்ளிகளில், மாணவர் பற்றாக்குறையால், ஆயிரத்துக்கும்
மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களை நீக்க, கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும், 25,200 அரசு மற்றும்
அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகள்
உள்ளன. இவற்றில் தற்போது, 25
மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற
அளவில், ஆசிரியர்கள் உள்ளனர்.
தலா 2 ஆசிரியர்கள்: இவற்றில், 10 ஆயிரம்
பள்ளிகளில், தலா, இரண்டு ஆசிரியர்கள்
மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இந்த
இரண்டு ஆசிரியர்கள் தான், ஒன்றாம்
வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை,21
பாடங்களை நடத்த வேண்டும்.மேலும்,
தேர்தல் பணிகள், சமூகநலத் துறைத் திட்டம்,
கல்வித் துறை திட்டப் பணிகளையும்
மேற்கொள்கின்றனர். இதில் ஒரு ஆசிரியர்
விடுமுறை எடுத்தால், ஒரு ஆசிரியர்
மட்டுமே பள்ளியில் இருப்பார். அவரும்
அரசுப் பணிக்கு சென்று விட்டால்,
பள்ளியில் ஆசிரியர் அல்லாத நிலை தான்
ஏற்படுகிறது.தனியார் பள்ளிகளுக்கு,
அதிக அளவில் அரசே அனுமதி அளிப்பதால்,
அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க,
பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர்.
இதனால், அரசு தொடக்கப் பள்ளிகளில்
மாணவர் விகிதம் வெகுவாகக்
குறைந்துள்ளது.ஆனால்,
அரசுப்பள்ளிகளில் மாணவர்
சேர்க்கையை அதிகரிக்க, கல்வித்
துறை முயற்சி மேற்கொள்ளவில்லை.
மாறாக, மாணவர் எண்ணிக்கை குறைந்த
பள்ளிகளின், 1,000 ஆசிரியர்
பணியிடங்களை, அரசிடமே திரும்ப
ஒப்படைக்க, தொடக்கக்
கல்வி இயக்ககம்உத்தரவிட்டு உள்ளது.இதற்கு
ஆசிரியர்களிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஆசிரியர் பணியிடங்களை குறைத்தால் ,
தொடக்கப் பள்ளிகள் மூடும் அபாயம் ஏற்படும்
என்று கவலை அடைந்து உள்ளனர்.
அதிகாரிகளிடம்
முறையீடு:இதுகுறித்து,
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்
கூட்டணி மாநிலத் தலைவர், மோசஸ்
கூறியதாவது:மாணவர்
விகிதத்தை வைத்து, ஆசிரியர்
பணியிடங்களை குறைப்பது,
பள்ளிகளை கொஞ்சம் கொஞ்சமாக
மூடுவதற்கு வழிஏற்படும். இதுகுறித்து,
ஏற்கனவே கல்வித் துறை அதிகாரிகளிடம்
முறையிட்ட பிறகும், ஆசிரியர்
பணியிடங்களை திரும்பப் பெற
நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
எனவே,வரும் 22ம் தேதி, 'ஜாக்டோ'
ஆலோசனைக் கூட்டத்தில், இதுகுறித்தும்
விவாதம் நடத்த உள்ளோம்.இவ்வாறு, அவர்
கூறினார்.

No comments:

Post a Comment