அண்ணா பல்கலைக்கழகம், அதன் கீழ்
இயங்கி வரும் உறுப்புக் கல்லூரிகள்,
மண்டல அலுவலகங்களில் காலியாக
இயங்கி வரும் உறுப்புக் கல்லூரிகள்,
மண்டல அலுவலகங்களில் காலியாக
உள்ள 280 பேராசிரியர், இணைப்
பேராசிரியர் காலிப் பணியிடங்களை
நிரப்புவதற்கான அறிவிப்பை
வெளியிட்டுள்ளது. இதற்கு
விண்ணப்பிக்க ஏப்ரல் 10 கடைசித்
தேதியாகும்.அண்ணா
பல்கலைக்கழகத்துக்கு மதுரை, கோவை,
திருநெல்வேலி ஆகிய பகுதிகளில்
மண்டல அலுவலகங்களும், அரியலூர்,
ஆரணி, திண்டுக்கல், காஞ்சிபுரம்,
நாகர்கோயில், பண்ருட்டி,
பட்டுக்கோட்டை, ராமநாதபுரம்,
திருக்குவளை, தூத்துக்குடி,
திண்டிவனம், திருச்சி, விழுப்புரம்
ஆகிய பகுதிகளில் உறுப்புக்
கல்லூரிகளும் உள்ளன.இந்தக்
கல்லூரிகள், மண்டல அலுவலகங்களில்
காலியாக இருக்கும் 178 இணைப்
பேராசிரியர் பணியிடங்களையும், 102
பேராசிரியர் பணியிடங்களையும்
நிரப்புவதற்கான அறிவிப்பை
பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இணைப் பேராசிரியர் பணியிடத்துக்கு
விண்ணப்பிக்க ஆராய்ச்சிப் படிப்பு
முடித்திருக்க வேண்டியதோடு, 5
ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி
அனுபவம் பெற்றிருக்க
வேண்டும்.பேராசிரியர்
பணியிடத்துக்கு விண்ணப்பிக்க
ஆராய்ச்சிப் படிப்பு
முடித்திருப்பதோடு, 13 ஆண்டுகள் பணி
அனுபவம் பெற்றிருக்க
வேண்டும்.இதுகுறித்த மேலும்
விவரங்களை www.annauniv.edu
இணையதளத்தைப் பார்த்துத்
தெரிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment