Sunday, March 15, 2015

உபரி ஆசிரியர் இடங்களை 'சரண்டர்' செய்ய உத்தரவு

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில்,  உபரியாக உள்ள
ஆசிரியர் குறித்த பட்டியலை அனுப்பி வைக்க, தொடக்கக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதனால், உபரியாக உள்ள ஆசிரியர்கள்,
'கிலி' அடைந்து உள்ளனர்.
இந்த துறையில், 50 லட்சத்திற்கும்
மேற்பட்ட மாணவ, மாணவியர்
படிக்கின்றனர்.2 லட்சம்ஆசிரியர்
பணியாற்றி வருகின்றனர்.இதில்,
150க்கும் குறைவாக மாணவர் உள்ள
பள்ளியில், 30 பேருக்கு,
ஒரு ஆசிரியரும்,
150க்கும்அதிகமானமாணவர் உள்ள
பள்ளியில், 40 பேருக்கு,
ஒரு ஆசிரியரும்
நியமிக்கப்படுகிறது.நடுநிலைப்
பள்ளியில், 35 மாணவருக்கு,
ஒரு ஆசிரியர் விகிதத்தில் பணியிடம்
வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு பள்ளியிலும்,
உபரி ஆசிரியர் பணியிடம் இருக்கக்
கூடாது என, காலிப்
பணியிடத்திற்கு ஏற்ப,
ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில்,
பணி நிரவல்
செய்யப்படுகிறது.உபரி ஆசிரியராக
இருப்பவர்கள், மாணவரின் வருகைப்
பதிவில் சில
முறைகேடு வேலையை செய்து,
விதிமுறைக்கு புறம்பாக,
உபரி ஆசிரியராகவே காலம்
தள்ளி வருகின்றனர். இதனால், கல்வித்
துறைக்கு பெரும்
இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில்,
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம்
தேதியை அடிப்படையாக கொண்டு,
உபரி ஆசிரியர் பட்டியல் தயாரிக்க
வேண்டும் எனவும், அது குறித்த
விவரங்களை இயக்குனரகத்திற்கு
அனுப்ப வேண்டும் எனவும்,
தலைமை ஆசிரியர்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.ஆசிரியர்
பணியிடம் இல்லாத பள்ளியில்,
உபரி ஆசிரியராக இருப்பவர்
விவரத்தை கண்டறிந்து, அதை, 'சரண்டர்'
செய்ய வேண்டும் எனவும், அதன்பின்,
எக்காரணம் கொண்டும், அந்த பள்ளியில்
காலிப் பணியிடத்தை காட்டக்
கூடாது என்றும், தொடக்கக்
கல்வி இயக்குனர்வலியுறுத்தி உள்ளார்
.வரும் ஆகஸ்ட்
அடிப்படையில்கணக்கெடுப்பு நடத்த
கோரிக்கை:மாணவர்
எண்ணிக்கைக்குஏற்ப, ஆசிரியர் விகிதம்
கணக்கீடு செய்யப்பட்டு, கூடுதலாக
உள்ள ஆசிரியர்,
வேறுபள்ளிகளுக்கு மாற்றப்படுகிறார்
.
இதற்கு, ஆசிரியர் சங்கங்கள்
எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.ஆனால்,
கடந்த ஆண்டு ஆகஸ்ட்
இறுதி நிலவரத்தின்
அடிப்படையில்,உபரி ஆசிரியரை
அடையாளம் காண்பதற்கு கடும்
எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
நடப்பாண்டு ஆகஸ்ட் இறுதி வரை,
மாணவர் சேர்க்கைக்கு அவகாசம்
உள்ளது. எனவே, நடப்பாண்டு, ஆகஸ்ட்
இறுதி நிலவரத்தின் அடிப்படையில்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது,
ஆசிரியர்களின் கோரிக்கையாக
உள்ளது .

No comments:

Post a Comment