Tuesday, March 03, 2015

துறைத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும்!

அரசு ஊழியர்கள் பதவி உயர்வுக்கான
துறைத்தேர்வுகளுக்கு மார்ச் 31-ம்
தேதி வரை ஆன்-லைனில்
விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக
டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு
அதிகாரி வே.ஷோபனா
வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில்
கூறியிருப்பதாவது:
ஆன்-லைன் விண்ணப்பம்
தமிழக அரசுத் துறைகளில்
பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள்
மற்றும் ஆசிரியர்களின்
பதவி உயர்வு தகுதிக்காக
ஆண்டுக்கு இரு முறை (மே, டிசம்பர்)
துறைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்த தேர்வுகளை தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையம்
(டிஎன்பிஎஸ்சி) நடத்துகிறது.இந்த
ஆண்டுக்கான
முதலாவது துறைத்தேர்வுகள் மே 24-ம்
தேதி தொடங்கி 31-ம்
தேதி வரை நடைபெறுகிறது.
துறைத்தேர்வு எழுத விரும்பும்
அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும்
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆன்-லைனில்
(www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 31-ம்
தேதி ஆகும்.
ஆகஸ்ட் மாதம் தேர்வு முடிவு
தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை மே 17
முதல் ஆன்-லைனில் பதிவிறக்கம்
செய்துகொள்ளலாம்.
தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 7, 16-ம்
தேதியிட்ட
டிஎன்பிஎஸ்சி செய்தி வெளியீட்டில்
வெளியாகும்.
இவ்வாறு ஷோபனா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment