தனியார் பள்ளிகளுக்கு இணையாக,
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம்
பேசக் கற்றுக் கொடுக்க, ஒன்று, இரண்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு 'ஸ்போக்கன் இங்கிலிஷ்' வகுப்பு வரும் 16ம் தேதி நடத்தப்படுகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம்
பேசக் கற்றுக் கொடுக்க, ஒன்று, இரண்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு 'ஸ்போக்கன் இங்கிலிஷ்' வகுப்பு வரும் 16ம் தேதி நடத்தப்படுகிறது.
ஆங்கில மோகத்தின் காரணத்தால்,
பெரும்பாலான பெற்றோர் ஆங்கில வழிக்
கல்வி தரும், தனியார் மெட்ரிக் பள்ளிகளில்,
குழந்தைகளை சேர்க்கின்றனர். இதனால்,
அரசு பள்ளிகளில் மாணவர்கள்
எண்ணிக்கை தொடர்ந்து சரிவை
சந்திக்கிறது.இதையடுத்து, தனியார்
பள்ளிகளுக்கு இணையாக,
அரசு பள்ளிகளிலும் மாணவ,
மாணவியருக்கு ஆங்கிலம் எழுதவும்,
பேசவும் கற்றுக் கொடுக்க
கல்வித்துறை முயற்சித்து வருகிறது.
இந்த வரிசையில் மத்திய அரசின்
அனைவருக்கும் கல்வி இயக்க (சர்வ சிக்ச
அபியான்) திட்டத்தில்,
ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆங்கிலப்
பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதன்படி, அரசுப் பள்ளிகளின் ஒன்றாம்,
இரண்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு,
வரும் 16, 17ம் தேதிகளில் முதற்கட்டமாகவும்,
19, 20ம் தேதிகளில் இரண்டாம் கட்டமாகவும்
ஆங்கிலப்பேச்சு (ஸ்போக்கன் இங்கிலிஷ்)
பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சியில், அனைத்து ஆரம்பப்
பள்ளிகளின் ஆசிரியர்களும் பங்கேற்க,
அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆசிரியர்களுக்குப் பேச்சுப் பயிற்சி,
மாணவர்களுக்கு அளிக்க
வேண்டியபயிற்சியுடன், ஆங்கிலப்
பேச்சுக்கான 'சிடி'யும் வழங்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment