தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி
திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 1175
கூடுதல் வகுப்பறைகளை ஜூனில் திறக்க
நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என
அத்திட்ட இணை இயக்குனர்
நாகராஜமுருகன் தெரிவித்தார்.
மதுரை, தேனி உட்பட எட்டு
மாவட்டங்களின் எஸ்.எஸ்.ஏ., திட்ட
பொறியாளர், ஒருங்கிணைப்பாளர்கள்
ஆய்வுக் கூட்டம் மதுரை முதன்மை கல்வி
அலுவலகத்தில் நடந்தது. மாநிலத் திட்ட
பொறியாளர் சுதாகரன்,
ஒருங்கிணைப்பாளர் காயத்ரி பங்கேற்றனர்.
இதில் இணை இயக்குனர் பேசியதாவது:
மாநிலத்தில் இந்தாண்டு 128 புதிய
தொடக்கப் பள்ளிகள், 42 தரம் உயர்த்தப்பட்ட
நடுநிலைப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன.
இவை உட்பட கூடுதல் வகுப்பறைகள்
தேவை என்ற அடிப்படையில், 2014-15ல்
ரூ.64.62 கோடியில் 1175 புதிய கூடுதல்
வகுப்பறைகள் கட்ட எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில்
ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் 50 சதவீத
பணிகள் முடிவுற்றன. மீதமுள்ள பணிகளை
ஜூனிற்குள் முடிக்க நடவடிக்கை
எடுக்கப்படுகிறது. கூடுதல் வகுப்பறை
கட்டுமான பணிகளில் ஏதேனும் சிக்கல்
இருந்தால் அதிகாரிகள் கவனத்திற்கு
கொண்டுசென்று முடிக்க வேண்டும்.
இதுதொடர்பாக திட்ட இயக்குனர்
பூஜாகுல்கர்னி உத்தரவின்படி கோவை,
விழுப்புரம் மண்டலங்களில் ஆய்வு நடந்தது.
இன்று (ஏப்.,21) திருச்சி மண்டலத்தில்
ஆய்வுக் கூட்டம் நடக்கிறது என்றார்.
Tuesday, April 21, 2015
1175 புதிய வகுப்பறைகள் ஜூனில் திறப்பு: எஸ்.எஸ்.ஏ., இணை இயக்குனர் தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment