தனியார் பள்ளிகள் அதிகரித்து வரும்
சூழலில் அரசுப் பள்ளிகளை காப்பாற்ற
வேண்டிய பொறுப்பு ஆசிரியர்கள்
கையில்தான் உள் ளது
என்றார்சூழலில் அரசுப் பள்ளிகளை காப்பாற்ற
வேண்டிய பொறுப்பு ஆசிரியர்கள்
கையில்தான் உள் ளது
கல்வியாளரும், மனோன்மணியம்
சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள்
துணை வேந்தருமான
வே.வசந்திதேவி.
சமூகக் கல்வி நிறுவனம் மற்றும்
யுனிசெஃப் இணைந்து குழந்தைகள்
நேயப் பள்ளிகளை உருவாக்குவது
குறித்த கலந்துரையாடல் கூட்டம்
திருச்சியில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து
வசந்திதேவி பேசியதாவது: தற்
காலத்தில் கல்வியின் போக்கு சீரழிந்து
வருவதை எதிர்த்து ஆசிரிய சங்கங்கள்
குரல் கொடுக்க வில்லை, ஆசிரிய
சமுதாயம் எங்கே போனது என்ற
சந்தேகம் எழுகிறது.
1980-களில் பல்வேறு கோரிக்
கைகளுக்காக போராடிய ஆசிரி
யர்களுக்கு பெற்றோர்களும்,
பொதுமக்களும் துணை நின்றனர்.
ஆனால், அந்த உணர்வு, உறவு இப்போது
இல்லை. இதற்கு காரணம் ஆசிரியர்-
பெற்றோர் இடையே மிகப்பெரிய
இடைவெளி ஏற்பட்டுள்ளது.
தனியார்மயத்தை ஊக்குவிக் கும்
அரசுகளால், அரசுப் பள்ளி களுக்கும்
ஆபத்துதான். தனியார் பள்ளிகள்
பெருகுவதற்கு அரசின் கொள்கைகளே
காரணம். ஆசிரியர் களும், அவர்கள்
சார்ந்துள்ள சங்கங்களும்தான் அரசுப்
பள்ளிகளை காப்பாற்ற வேண்டும்.
ராஜஸ்தான் மாநிலத்தில் 17,000 அரசுப்
பள்ளிகள் மூடப்பட்டு விட்டன. இங்கேயும்
அந்த நிலை ஏற்படலாம். அதற்கு முன்பாக
நாம் விழித்துக்கொள்ள வேண்டும்.
அரசுப் பள்ளிகள் மீதான நம் பிக்கை
குறைவுக்கு காரணம் என்ன, நாம்
அக்கறையுடன்தான் கல்வி
போதிக்கிறோமா என்பதை ஆசிரியர்கள்
சிந்தித்துப் பார்க்க வேண்டும். அரசுப்
பள்ளிகளை குழந்தைகள்நேயப்
பள்ளிகளாக உருவாக்க வேண்டிய
கடமையும், பொறுப்பும்
ஆசிரியர்களுக்கு உள் ளது. இதற்கான
நடவடிக்கையை விரைந்து தொடங்க
வேண்டும் என்றார் அவர். யுனிசெஃப்
குழந்தை கள் பாதுகாப்பு அலுவலர்
வித்யா சாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment