அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு,
நேர்முகத் தேர்வில் வெற்றி
பெற்றோர் பட்டியலை, ஆசிரியர்
தேர்வு வாரியமான டி.ஆர்.பி.,
வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு, 2013 மே 28ம் தேதி
வெளியிட்ட அறிவிப்பின் படி,
அரசு கலை அறிவியல்
கல்லூரிகளில் காலியாக உள்ள
உதவிப் பேராசிரியர்
பணியிடங்களை, நேரடி நியமனம்
மூலம் நிரப்ப, டி.ஆர்.பி.,
நடவடிக்கை மேற்கொண்டது. பின்,
2013 நவம்பர், 25 முதல், டிசம்பர், 6ம்
தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு
நடந்தது. இதன்படி, மதிப்பெண்
கணக்கிடப்பட்டு, ஜாதி வாரி இட
ஒதுக்கீடுப் படி, நேர்முகத்
தேர்வுக்கான விண்ணப்பதாரர்கள்
தேர்வு செய்யப்பட்டனர். ஒரு
பணியிடத்துக்கு, ஐந்து பேர் என்ற
விகிதத்தில், தேர்வானோருக்கு,
கடந்த பிப்., 25 முதல் மார்ச் 25 வரை
நேர்முகத்தேர்வு நடந்தது. இதைத்
தொடர்ந்து, நேர்முகத் தேர்வில்
வெற்றி பெற்ற, 81 பேரின்
பட்டியலை டி.ஆர்.பி.,
வெளியிட்டுள்ளது. இப்பட்டியல்,
டி.ஆர்.பி., இணையதளத்தில் இடம்
பெற்றுள்ளது. பணிக்கு
இறுதியாக தேர்வானோரின்
பட்டியல் விரைவில்
அறிவிக்கப்படும் என, டி.ஆர்.பி.,
தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment