அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்களும், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக நேரடியாக நியமிக்கப்படுகிறார்கள்.
இதற்கான தேர்வு எழுதுவதற்கு கடந்த 2013-ம் ஆண்டு வரை வயது வரம்பு 57 ஆக இருந்து வந்தது.
இதற்கான தேர்வு எழுதுவதற்கு கடந்த 2013-ம் ஆண்டு வரை வயது வரம்பு 57 ஆக இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 139 பொறியியல் கல்லூரிகளுக்கு உதவி பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
அதில், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் உட்பட அனைத்து வகுப்பினருக்கும் வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
தனியார் கல்வி நிறுவனங்களில் வேலை பார்த்து அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்த்து வந்த பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் வயது வரம்பு அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்தனர். வயது வரம்பை உயர்த்துமாறு கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து, பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு வயது வரம்பை மீண்டும் 57 ஆக உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்து.
இதற்கிடையே, 139 பொறியியல் உதவி பேராசிரியர் நியமன பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி அறிவித்தது. வயது வரம்பு 57 ஆக உயர்த்தப்பட்டதால் உதவி பேராசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் கால அவகாசம் அளிக்கும் என்று 35 வயதைக் கடந்த முதுநிலை பொறியியல் பட்டதாரிகள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், தொடர்ந்து பல மாதங்கள் ஆகியும் அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 57 ஆக உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முந்தைய அறிவிப்பின்படி 35 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். 35 வயதை கடந்தவர்கள் வயது வரம்பு கட்டுப்பாடு காரணமாக விண்ணப்பிக்க முடியவில்லை.
எனவே, அவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்க வேண்டியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு மே மாதம் முதல் வாரம் அல்லது 2-வது வாரத்தில் வெளியிடப்படும். இதற்கான எழுத்துத்தேர்வு ஜூன் மாதம் 3-வது வாரத்தில் நடத்தப்படும். ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 57 ஆக உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
No comments:
Post a Comment