அடுத்த கல்வி ஆண்டில் பள்ளி திறக்கும்
நாளில் அனைத்து மாணவ, மாணவியருக்கும் இலவச பொருட்களை வழங்க வேண்டும்
என்று ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.நாளில் அனைத்து மாணவ, மாணவியருக்கும் இலவச பொருட்களை வழங்க வேண்டும்
பள்ளிக் கல்வித்துறையின் சார்பில்
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல்
பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், டிபிஐ
வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக அரங்கில் நேற்று நடந்தது. அமைச்சர்
வீரமணி, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் மைதிலி ராஜேந்திரன், பள்ளிக்
கல்வித்துறை துணைச் செயலாளர்
சுபோத்குமார் மற்றும் பள்ளிக்
கல்வித்துறை இயக்குநர்கள், இணை
இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கடந்த 2011-12ம் ஆண்டு முதல்
2014-15ம் கல்வி ஆண்டு வரை பள்ளிக்
கல்வித்துறையின் அறிவிப்புகள் மற்றும்
அந்த அறிவிப்புகளின் தற்போதைய நிலை
குறித்தும், வரும் கல்வி ஆண்டில் பள்ளிக்
கல்வித்துறையால் மேற்ெகாள்ள
வேண்டிய செயல்பாடுகள் குறித்தும்
ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும்,
2015-16ம் கல்வி ஆண்டில் பள்ளி திறக்கும்
நாளில் மாணவ, மாணவியருக்கு
விலையில்லா பாடப்புத்தகம்,
நோட்டுகள்,புவியியல் வரைபடங்கள்,
சீருடைகள் மற்ற நலத்திட்ட பொருட்களை
வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
தற்போது பாடப்புத்தகங்கள் போய்
சேர்ந்துள்ள பள்ளிகளின் விவரங்கள்
குறித்தும் விவாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment