பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின்
கணக்கெடுப்பு சென்னையில்
தொடங்கியது. அனைவருக்கும் கல்வி
இயக்கம் சார்பில் மாற்றுத்திறன் உள்ள
குழந்தைகள் (5 முதல் 14 வயது வரை) பள்ளி
செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு
ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும்.
சென்னை மாவட்டத்தில் கூடுதல் முதன்மை கல்வி
அலுவலர்,உதவி திட்ட அலுவலர், மாவட்ட
ஒருங்கிணைப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள்,
ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், இயன்
மருத்துவ பயிற்றுனர்கள், தன்னார்வலர்கள் 150
பேர் பங்கேற்று கணக்கெடுக்கும் பணி
மேற்கொள்கின்றனர். அவர்கள் காலை 8
மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மாலை 4
மணி முதல் 6 மணி வரையிலும் வீடு வீடாக
சென்று மாற்று திறன்
கொண்டகுழந்தைகள் உள்ளனரா என
ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
கண்டறியப்படும் குழந்தைகள் மாநகராட்சி, அரசு
பள்ளிகளிலும் ஒவ்வொரு மண்டத்திலும்
உள்ள பள்ளிஆயத்த பயிற்சி மையம், வீட்டு வழிக்
கல்வி ஆகிய முறைகளில் பயிற்சி அளித்து அனைத்து
குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்கப்பட உள்ளனர்.
மேலும் அவர்களுக்கு மருத்துவ முகாம், இயன்
மருத்துவ பயிற்சி, தொழில்சார் பயிற்சி,
உதவி உபகரணங்கள் அடையாள அட்டைகள்
வழங்கப்படும். அருகில் உள்ள தொண்டு
நிறுவனங்களும் இதில் பங்கேற்கலாம்.
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள்
இருந்தால் அது தொடர்பாக 97888 58382
என்ற செல்போனில் சென்னை மாவட்ட
ஒருங்கிணைப்பாளரை தொடர்பு
கொள்ளலாம் என அனைவருக்கும் கல்வி
இயக்ககம் அறிவித்துள்ளது.
Saturday, April 04, 2015
பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு தொடங்கியது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment