Tuesday, May 26, 2015

சி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு: நாளை வெளியீடு

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு புதன்கிழமை (மே 27) வெளியிடப்படும்
என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது.சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.

அதைத்தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை தமிழகத்திலிருந்து ஒரு லட்சம் பேர் எழுதியுள்ளனர்.தேர்வு முடிவுகளை w‌w‌w.cb‌s‌e.‌n‌ic.‌i‌n என்ற இணையதளத்தில் மாணவர்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment