2015-16 ஆம் கல்வியாண்டின் தொடக்கத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் ஆசிரியர் பயிற்றுநர்களாக பணியாற்றி வரும் 500 பேர் பணிமூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களாக பள்ளிக்கு பணிமாறுதல்
செய்யப்படுவார்கள் என மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி அவர்கள் சென்ற வாரம் நமது சங்கத்தின் (தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்கம்) மாநிலத்தலைவர் சம்பத் அவர்கள் சந்தித்தபோது கூறியது அனைவரும் அறிந்ததே.
அவ்வாறு பணிமாறுதலுக்கான அரசு ஆணை நாளை வெளியாகலாம் என நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசாணை கிடைத்தவுடன் பதிவேற்றம் செய்யப்படும் என தோழர்களுக்கு தெரிவிக்கலாகிறது.
No comments:
Post a Comment