தமிழகத்தில், தற்போது, ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு இலவச, 'அட்லஸ்' புத்தகம் வழங்கப்படுகிறது.
வரும் கல்வியாண்டில், ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, 14 வகையான இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதில், 'அட்லஸ்' புத்தகம், ஆறுமுதல் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு,தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதால், 'அட்லஸ்' புத்தகத்தை மாற்ற வேண்டி இருந்தது. திருத்தப்பட்ட புத்தக தயாரிப்பு தாமதமானதால், கடந்த ஆண்டு வழங்கப்படவில்லை. வரும் கல்வியாண்டில், பள்ளிகள் திறந்தவுடன், எட்டாம் வகுப்பு வரை மட்டுமின்றி, ஒன்பது மற்றும் 10ம் வகுப்புக்கும் இலவச, 'அட்லஸ்' புத்தகம் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment