யுபிஎஸ்சி தேர்வுகளில் இந்த ஆண்டு மாற்றம் இருக்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பு நேற்று அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதே நேரம் யுபிஎஸ்சி தேர்வு முறை குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்கப்படும் என்றும், அக்குழு யுபிஎஸ்சி தேர்வு முறை, தேர்வு எழுதுவோரின் தகுதி, அதற்கான பாடதிட்டம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த குழு அறிக்கை அளிக்கும் வரை இதே தேர்வு முறை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தேர்வு வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இல்லாமல் பிராந்திய மொழிகளிலும் அமைய வேண்டுமென கோரி நாடு முழுவதும் பலகட்ட போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment