பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் வெள்ளிக்கிழமையோடு (மே 29) முடிவடைய உள்ள நிலையில், 1 லட்சம் பேர் நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே 6-ஆம் தேதி தொடங்கியது. சென்னையைத் தவிர்த்த பிற மையங்களில் விநியோகம் புதன்கிழமையோடு நிறைவடைந்தது.சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள விற்பனை மையங்களில் வெள்ளிக்கிழமை வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.இந்த நிலையில், புதன்கிழமை மாலை 5 மணி வரை 1 லட்சத்து 88 ஆயிரத்து 504 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதுபோல், நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வெள்ளிக்கிழமையோடு கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில், புதன்கிழமை மாலை வரை 1 லட்சம் பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment