அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வகுப்பு இருப்பது குறித்துபொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி களுக்கு இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங் கோவன் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் நலத்திட் டங்களைமுன்னிலைப்படுத்தி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க் கையை அதிகப்படுத்த வேண்டும். தீவிர மாணவர் சேர்க்கை தொடர்பாக உதவி மற்றும்கூடுதல் தொடக்கக் கல்வி அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும். அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உடனடி யாக முதல் வகுப்பு மாணவர் சேர்க்கையை தொடங்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
தீவிர மாணவர் சேர்க்கை தொடர் பாக ஊர்வலம் நடத்தப்பட வேண் டும். அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி வகுப்புகள் நடத்தப் படுகிறது என்பதை சுவரொட்டிகள் ஒட்டியும், ஊர்வலங்கள் நடத்தி யும் பொதுமக்களுக்கு தெரியப் படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குமாறு அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment