தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் களின் கல்வித்தரத்தை மேம்படுத்த மாதந்தோறும் ஆண்டாய்வு மேற் கொள்ளுமாறு உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உதவி தொடக் கக் கல்வி அதிகாரிகள் மற்றும் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு மாநில தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங் கோவன் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
ஊராட்சி ஒன்றியம் மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வண்ணம் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட எண் ணிக்கையிலான பள்ளிகளில் ஆண்டாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
18 பள்ளிகள்
ஜூன், ஜூலை, ஆகஸ்ட், அக்டோபர், நவம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் தலா 5 பள்ளிகளை ஆண்டாய்வு செய்வதுடன் தலா 18 பள்ளிகளைப் பார்வையிட வேண்டும்.
ஜூன், ஜூலை, ஆகஸ்ட், அக்டோபர், நவம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் தலா 5 பள்ளிகளை ஆண்டாய்வு செய்வதுடன் தலா 18 பள்ளிகளைப் பார்வையிட வேண்டும்.
12 பள்ளிகள்
இதேபோல், செப்டம்பர், டிசம்பர், ஏப்ரல் மாதங்களில் தலா 2 பள்ளிகளில் ஆண்டாய்வு மேற்கொள்வதுடன் தலா 12 பள்ளிகளைப் பார்வையிட வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், செப்டம்பர், டிசம்பர், ஏப்ரல் மாதங்களில் தலா 2 பள்ளிகளில் ஆண்டாய்வு மேற்கொள்வதுடன் தலா 12 பள்ளிகளைப் பார்வையிட வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment