Friday, July 17, 2015

தமிழ்நாட்டுப் பாடநூல், கல்வியியல் பணிகள் கழக செயலாளராக கார்மேகம் பொறுப்பேற்பு

தமிழ்நாட்டுப் பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் செயலாளராக எஸ்.கார்மேகம் புதன்கிழமை பொறுப்பேற்றார்.
பள்ளிக் கல்வி (இடைநிலை) இணை இயக்குநராக இருந்த அவர், இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். இதையடுத்து, பள்ளிக் கல்வி இயக்குநர் அளவிலான தமிழ்நாட்டுப் பாடநூல், கல்வியியல் பணிகள் கழக செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இணை இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குநர், சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் அவர் முன்னர் வகித்துள்ளார்.

No comments:

Post a Comment