Saturday, August 01, 2015

ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வு இன்றுமுதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர் கலந்தாய்வு மாறுதல் விண்ணப்பம் 31.07.2015 முதல் 06.08.2015 (தொடக்கக் கல்வி), 07.08.2015 (பள்ளிக்கல்வி) வரை விண்ணபிக்கலாம்

ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வு இன்றுமுதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, தற்போது அந்தந்த 
மாவட்டங்களில் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் ஆசிரியர்கள் தாங்களுக்குத் தேவையான பணியிடங்களை ஒளிவு மறைவின்றி தேர்வு செய்து வருகின்றனர். இதன்மூலம், அவர்களது சிரமங்களும் குறைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் இன்றுமுதல் வரும் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் இன்றுமுதல் வரும் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment