பள்ளி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு, இன்று துவங்குகிறது. ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் இடமாறுதல் கலந்தாய்வு, மே மாதம் நடக்கும்.
இந்த ஆண்டு, மூன்று மாதங்கள் தாமதமாக, பல சர்ச்சைகளுக்கு மத்தியில், இன்று துவங்குகிறது.முதற்கட்டமாக, இன்று காலை, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களான ஏ.இ.இ.ஓ., பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது.
சென்னையில், தொடக்கக் கல்வி இயக்குனர் அலு வலகத்திலும், மற்ற மாவட்டங்களில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்திலும் நடக்கிறது.
மாலை 3:00 மணிக்கு, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, தொடக்கக் கல்வி அதிகாரியாக பதவி உயர்வு வழங்கும் கலந்தாய்வு நடக்கிறது. ஏ.இ.இ.ஓ.,க்களைப் பொறுத்தவரை, அதிகாரியாக இருந்தால், அவர்கள் தங்களுக்கான குறிப்பிட்ட மாதத்தில் ஓய்வு பெற்று விட வேண்டும். மாறாக, ஆசிரியராக இருந்தால், அவரது ஓய்வுக்கான மாதம் வந்தாலும், அவர் அந்தக் கல்வி ஆண்டு முடியும் வரை பணியாற்ற முடியும். இந்த வசதிக்காக, ஓய்வு பெறும் நிலையில் உள்ள அதிகாரிகள், மீண்டும் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியராக, ஆசிரியர் பணிக்கு திரும்புவர்.
ஏ.இ.இ.ஓ.,க்கள், தனியார் நர்சரி, பிரைமரி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல், அரசின் நிதி உதவி அளித்தல், ஆசிரியர் நியமனம் போன்ற, பல நடவடிக்கைகளுக்கு பொறுப்பு அதிகாரியாக இருப்பதால், தனியார் மற்றும் அரசு
உதவிபெறும் பள்ளிகள் அமைந்துள்ள இடங்களுக்கு, மாறுதல் பெற அதிக போட்டி உள்ளது.
இருப்பினும், பரஸ்பரம் விட்டுக் கொடுத்து, இடமாறுதல் பெற, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஏ.இ.இ.ஓ.,க்கள் முடிவு செய்துள்ளனர்.

No comments:
Post a Comment