சென்னை: தமிழகத்தின், 10 மாவட்டங்களில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதிகள், புதிதாக அமைய உள்ளன.
தமிழகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்சீர்மரபினர் நலத்துறை கட்டுப்பாட்டில், 1,209 விடுதிகள் உள்ளன. இந்நிலையில், கல்வி நிறுவனங்கள் அதிகமுள்ள இடங்களில், புதிய விடுதிகள் அமைக்க, இத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒரத்தநாடு,
கோபி செட்டிபாளையம், தேனி, பரமக்குடி, பீளமேடு, வடசென்னிமலை,
பாப்பாரப்பட்டி, நன்னிலம், உசிலம்பட்டி, தேனி நகரம் ஆகிய பகுதிகளில்,
புதிதாக, 10 விடுதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. இப்பகுதிகளில், வாடகை கட்டடங்களில் விடுதிகள் செயல்படும். டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில், இந்த விடுதிகள் திறக்கப்படும் என, தெரிகிறது. இதையொட்டி, அந்தந்த
பகுதிகளில் உள்ள, கல்லூரி, பள்ளிகளுக்கு, நலத்துறை சார்பில்,
கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. விடுதிகள் திறக்கப்பட்ட உடன், வழக்கமான
நடைமுறையோடு, மாணவர் சேர்க்கை நடக்கும்.
No comments:
Post a Comment