தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி :-
நாட்டின் சுதந்திரம், ஒருமைப்பாடு ஆகியவற்றைக்
காக்கவும் வலுப்படுத்தவும் என்னை அர்ப்பணித்துச்
செயல்படுவேன் என்று மனமார
உறுதி கூறுகிறேன்.
நான் ஒருபோதும் வன்முறையில் ஈடுபடமாட்டேன்
என்றும், மதம், மொழி, வட்டாரம் மற்றும் அரசியல்
அல்லது பொருளாதார பேதங்களுக்கு அமைதியான முறையிலும் அரசியல் சட்டத்திற்குட்பட்டும்தீர்வு காணத் தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் நான் மேலும் உறுதி கூறுகிறேன்.
No comments:
Post a Comment