முசிறி உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் துவக்க மற்றும் 
நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் சுமார் 60 பேர் கோரிக்கைகளை
வலியுறுத்தி தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால்
பரபரப்பு ஏற்பட்டது.
நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் சுமார் 60 பேர் கோரிக்கைகளை
வலியுறுத்தி தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால்
பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கபள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஆசிரியர்கள் முசிறி வட்ட செயலாளர் சம்சுதின் தலைமையில் முசிறி உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் நேற்று மாலை கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சமதர்மதாஸ் என்பவரை சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து விளக்கம் கேட்க சென்றனர். அப்போது அவர் அலுவலகத்தில் இல்லை.
இதையடுத்து 10 ஆசிரியைகள் உள்பட 60 ஆசிரியர்கள் அலுவலகத்தின் உள்ளே தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முசிறி ஒன்றியத்தை சேர்ந்த துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் நிர்வாக நலனுக்காக இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். 
இதில் எங்களுக்கு மாதாந்திர சம்பளம் உரிய தேதியில் வழங்கப்படுவதில்லை. அதேபோல் ஆசிரியர்கள் கடனுதவி கேட்டு விண்ணப்பித்தால் மனுமீது நடவடிக்கை எடுக்க தேவையில்லாமல் காலதாமதம் செய்து மனுவை நிராகரிக்கிறார்.
மேலும் பணப்பயன்கள் உரிய தேதியில் வழங்கப்படுவதில்லை என்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் கல்வி துறை உயர் அலுவலர்கள் தொலைபேசியில் பேசி உறுதியளித்ததை அடுத்து ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
 
 
No comments:
Post a Comment