Thursday, November 14, 2013

ஊதிய முரண்பாட்டை உடனடியாக களைய வேண்டும் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கோரிக்கை!

முதுகலை ஆசிரியர் களுக்கான ஊதிய முரண்பாட்டை உடனடியாக களைய வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் 
கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத் தின் மாவட்ட செயற்குழு கூட்டம் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடை பெற்றது.கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் சாமி துரை தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் காம ராஜ் அனைவரையும் வர வேற்றார். மாவட்ட அமைப்பு செயலாளர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார். தலைமையிடச் செய லாளர் வரதராஜன், உடையார் பாளையம், அரியலூர் கல்வி மாவட்டத்தலைவர் சிவமணி, பாண்டியன், மாவட்டத் துணைத் தலைவர் ராஜேந் திரன், மாவட்ட இணை செயலாளர் பிரிட்டோ ஜெக நாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செந்தமிழன், கென்னடி ஆகியோர் சிறப் புரையாற்றினர்.

ஊதிய முரண்பாடு

கூட்டத்தில் பணி விதி 720 உடனடியாக நீக்க வேண்டும். மேல்நிலைக்கல்விக்கென தனி இயக்குனரகம் அமைக்க வேண்டும், விடைத்தாள்கள் திருத்துவதற்கு தாள் ஒன்றுக்கு ரூ.25 வழங்கிட வேண்டும், முதுகலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாட்டை உடனடியாக களைய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.முடிவில் மாவட்ட பொருளா ளர் காந்தி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment