Thursday, November 14, 2013

பொதுத்தேர்வு: தனித்தேர்வர்கள் விண்ணப்பங்கள் நாளை முதல் வரவேற்பு!

தமிழ்நாடு அரசு தேர்வர்கள் இயக்ககத்தின் மூலம் வரும் 2014ம் ஆண்டு மார்ச் 
மாதம் நடக்கும் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் விண்ணப்பங்கள் நாளை (15ம் தேதி) முதல் வரும் 25ம் தேதி வரை வரவேற்கப்படுகிறது.

தனித்தேர்வர்கள் தனியார் ஆன்லைன் மையங்கள் மூலம் பதியும் போது கடந்த அக்., தேர்வில் பல குறைபாடு ஏற்பட்டது. இதனால் தனித்தேர்வர்கள் விபரம் சரியான முறையில் பதிய முடியாமல் பாதித்தனர். தற்போது தனித் தேர்வர்கள் சிரமமின்றி தங்கள் இருப்பிடங்களுக்கு அருகேயே விண்ணப்பங்களை சரியான முறையில் ஆன்லைனில் பதிய ஒருங்கிணைப்பு மையங்கள் அரசு தேர்வுகள் இயக்ககம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் அரசு தேர்வுகள் இயக்ககம் மூலம் விழுப்புரம் காமராஜ் நகராட்சி மேல்நிலை பள்ளி, திண்டிவனம் புனித அன்னாள் மேல்நிலை பள்ளி, கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, சங்கராபுரம் அரசு ஆண்கள், திருக்கோவிலூர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளிகள் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த மையங்களில் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணிவரை மாணவர்கள் புகைப்படம் எடுத்தல் மற்றும் ஆன்லைனில் பதியும் பணிகள் நடக்கும். வரும் 2014ம் ஆண்டு தேர்வுகளில் பதியவுள்ள அனைத்து மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் இருப்பிடங்களுக்கு அருகேவுள்ள மையங்களில் அனைத்து கல்வி சான்றோடு நேரில் சென்று உரிய கட்டணத்தை செலுத்தி பதிய வேண்டும். இவ்வாறு சி.இ.ஓ., மார்ஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment