வணிகவரி துணை ஆணையாளர் உள்பட குரூப் 2 தொகுதியின் கீழ் வரும் ஆயிரத்து 64 பணியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை எழுத்துத்தேர்வு நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி. ) நடத்தும் இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 64 ஆயிரத்து 583 பேர் எழுதுகிறார்கள். இதற்காக, 114 நகரங்களில் 2 ஆயிரத்து 269 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 79 ஆயிரத்து 550 பேர் தேர்வு எழுதுகிறார்கள். இதற்காக 263 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் அனைத்தும் கொள்குறி வகை அடிப்படையில் இருக்கும். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் பிரதானத் தேர்வினை எழுத அனுமதிக்கப்படுவர்.
அதில் தேர்ச்சிப் பெறுபவர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும். தேர்வுகளை கண்காணிக்க 2 ஆயிரத்து 269 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு:
தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை தேர்வாணையத்தின் இணையதளத்தில்
இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.vதேர்வுக்கு முன்புவரை, அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலும் இதனை பதிவிறக்கம் செய்ய
வழி செய்யப்பட்டுள்ளதாக தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை தேர்வாணையத்தின் இணையதளத்தில்
இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.vதேர்வுக்கு முன்புவரை, அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலும் இதனை பதிவிறக்கம் செய்ய
வழி செய்யப்பட்டுள்ளதாக தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்வுக் கூடத்துக்கு அனுமதிக்கப்பட்ட பேனா தவிர, புத்தகம், குறிப்புகள்,
பேஜர், செல்போன், கால்குலேட்டர், மின்னணு கருவிகள், பதிவு கருவிகள்
ஆகியவற்றை எடுத்துச் செல்லக்கூடாது. தேர்வுக் கூடம் கண்காணிப்பு பணியிலும், தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் வகையிலும் பறக்கும்படை பணியிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ஆயிரத்தும் மேற்பட்ட தேர்வர்கள் எழுதும் தேர்வு கூடங்கள் மற்றும் பதற்றமான மையங்களில் விடியோ மூலம் பதிவு செய்யப்படும் என தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment