ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வு நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்த தேர்வை தமிழ்நாட்டில் 930 பட்டதாரிகள் எழுதுகிறார்கள். ஐ.ஏ.எஸ்.மெயின் தேர்வு
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையிலான உயர் பதவிகளுக்கு சிவில் சர்வீசஸ் என்ற தேர்வை யு.பி.எஸ்.சி.நிறுவனம் நடத்தி வருகிறது.
இது, முதல் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய 3ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையிலான உயர் பதவிகளுக்கு சிவில் சர்வீசஸ் என்ற தேர்வை யு.பி.எஸ்.சி.நிறுவனம் நடத்தி வருகிறது.
கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் நிலைதேர்வில் வெற்றி பெற்றவர்கள்
மெயின் தேர்வை எழுதலாம். மெயின் தேர்விலும் நேர்முகத்தேர்விலும்
சேர்ந்து எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது.
அதிக மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணிகளுக்கு தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். இந்த வருடம் 1000 பணியிடங்களுக்கு கடந்த மே மாதம் 26–ந்தேதி முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டது. 46 நகரங்களில் நடந்த இந்த
தேர்வை இந்தியா முழுவதும் 9 லட்சத்து 80 ஆயிரம் பட்டதாரிகள்
எழுதினார்கள்.
தமிழ்நாட்டில் மட்டும் 27 ஆயிரம் பேர் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவு ஆகஸ்டு 2–ந்தேதி வெளியிடப்பட்டது. இதில் 13 ஆயிரத்து 500 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழ்நாட்டில் 930 பேர் தேர்ச்சி பெற்றனர். நாளை மறுநாள் தேர்வு
மெயின் தேர்வு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இந்த
தேர்வை தமிழ்நாட்டில் 930 பேர் எழுதுகிறார்கள். 2–ந்தேதி கட்டுரை மற்றும் ஆங்கில தேர்வுகள் நடக்கின்றன. தொடர்ந்து தினமும் தேர்வு நடைபெற
உள்ளது. அதாவது பொது கல்வி, விருப்ப பாடம் உள்ளிட்ட பல தேர்வுகள்
நடைபெற இருக்கிறது. வழக்கமாக இந்த தேர்வு அக்டோபர் மாதத்திலேயே நடந்துவிடும். ஆனால் இந்த வருடம் மிகத்தாமதமாக நடைபெறுகிறது.
No comments:
Post a Comment