பொது நூலகத் துறை, 30 கோடி ரூபாய்க்கு, தமிழ்
மற்றும் ஆங்கில புத்தகங்களை, வாங்க உள்ளது. "இதற்கு, ஜன., 20ம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம்' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் (கூடுதல்
பொறுப்பு நூலகத் துறை) அறிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பு: நூலகத் துறை கீழ் இயங்கும் நூலகங்களுக்காக, 2012, 2013
பதிப்பு தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள், வாங்கப்பட உள்ளன. இதற்கான
விண்ணப்பங்களை,www.connemarapubliclibrarychennai.com என்ற இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை, பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகளும், இணையதளத்தில் உள்ளன.
விண்ணப்பிக்க விரும்பும் பதிப்பகங்கள், மூன்று படிவங்களை, உரிய முறையில்,
பூர்த்தி செய்து, நூல் பதிவு கட்டணமாக, தலா, 100 ரூபாய் வீதம், இந்தியன்
வங்கி கிளையில், நூலகத் துறை கணக்கில் செலுத்தி, அதன் ரசீதை,
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். மாதிரி நூல்களையும் சேர்த்து, அந்தந்த
மாவட்ட நூலக ஆணைக்குழு அலுவலகத்தில், ஜன., 20ம் தேதிக்குள், விண்ணப்பங்களை
சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், விவரம் அறிய, 0442852 4263 என்ற தொலைபேசியில், தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, இயக்குனர் அறிவித்துள்ளார். பொது நூலக நிதி மற்றும் ராஜாராம்
மோகன்ராய் நூலக அறக்கட்டளை நிதி உதவியில் இருந்து, 30 கோடி ரூபாய்க்கு,
புத்தகங்கள் வாங்கப்பட உள்ளன.
No comments:
Post a Comment